கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இளைஞர் ; எதிர்திசையில் வந்த பேருந்தில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 2105
எதிர்திசையில் வந்த பேருந்தில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள்

தஞ்சை கரந்தையில், எதிர்திசையில் வாகனங்கள் வருவதை பார்க்காமல் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தமிழினியன் என்பவர் கரந்தை கோடியம்மன் கோவில் சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் அந்த வழியாக வந்த அரசு பேருந்திற்கு பின்னால் சென்றவாறு எதிர்திசையில் வாகனங்கள் வருவதை பார்க்காமல் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது எதிர்திசையில் திடீரென பேருந்து வந்ததால், அந்த பேருந்தின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தமிழினியன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments