கோவேக்சினுக்கு இந்த வாரம் WHO அங்கீகாரம்? ; கோவேக்சின் போட்ட இந்தியர்களின் சர்வதேச பயணம் சிக்கலின்றி நடக்கும் என எதிர்பார்ப்பு

0 1614
கோவேக்சினுக்கு இந்த வாரம் WHO அங்கீகாரம்?

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமான WHO இந்த வாரம் அங்கீகாரம் வழங்கும் என கூறப்படுவதால், அதைப் போட்ட இந்தியர்கள் பலரின் சர்வதேச பயணம் சிக்கலின்றி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு WHO மற்றும் பல நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதால் அதை போட்ட இந்தியர்கள் பெரிய அளவில் பிரச்சனை இன்றி வெளிநாட்டு பயணங்கள் நடத்தும் நிலை உள்ளது. ஆனால் முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சினுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்காததால் அதைப் போட்டவர்கள் பன்னாட்டு பயணம் செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர்.

கோவேக்சினுக்கு அங்கீகாரம் தருமாறு கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் WHO விடம் விண்ணப்பித்தது. தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நோய் எதிர்ப்புத் திறன், பாதுகாப்பு, திறன் உள்ளிட்டவை குறித்து WHO நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகாரம் வழங்கும் முடிவை இந்த வாரம் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments