யானையை காட்டுக்குள் விரட்ட முயன்ற வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டி வந்த யானை

0 1237

கேரளாவில் சைரன் ஒலி எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்ட முயன்ற வனத்துறை வாகனத்தை, பதிலுக்கு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டி வரும் பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நின்றிருந்துள்ளது. இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே, யானையை காட்டுக்குள் விரட்ட துரத்திச் சென்றனர்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன யானை, திரும்பி நின்று வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டி வந்தது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் வாகனத்தை ரிவர்ஸ் எடுத்து, பின்னோக்கியே  வேகமாக இயக்கிச் சென்றதால், யானையின் பிடியில் இருந்து அவர்கள் தப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments