நீட் தேர்வு எழுதியிருந்த மாணவி தற்கொலை, அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

0 3252

அரியலூர் அருகே நீட் தேர்வு எழுதியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அம்மாணவியின் குடும்பத்தினர் கதறி அழுவது காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.நீட் தேர்வு எழுதியதில் இருந்தே தோல்வி பயத்தில் மன உளைச்சலில் இருந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கருணாநிதி-ஜெயலட்சுமி தம்பதி, 2 மகள்களுடன் துளாரங்குறிச்சியில் வசித்து வந்தனர்.

முதல் மகள் பெரம்பலூரில் நர்சிங் படித்து வரும் நிலையில், இரண்டாவது மகள் கனிமொழி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர் என்றும், நாமக்கல் கிரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்றவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் தேதி தஞ்சாவூரில் தாமரை பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதிய மாணவி, நேற்று முழுவதும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரியலூரில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று இரவு 8 மணி அளவில் திரும்பிய பெற்றோர், கதவை தட்டியும் திறக்காததால ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி கனிமொழி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மாணவியின் உடலை இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான சாத்தம்பாடி கொண்டுவந்துள்ளனர். மகள் உடலைப் பார்த்து தாய் கதறியழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தனுஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதியிருந்த மாணவி, தோல்வி பயத்தில் மன உளைச்சலால் இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments