விபத்தில் சிக்கி நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்து... 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட ஓட்டுநர்

0 2360

கரூரில் விபத்தில் சிக்கி நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், சிக்கிக் கொண்ட லாரி ஓட்டுநரை சுமார் 3 மணி நேரம் போராடி போலீசார் உயிருடன் மீட்டனர்.

சிமெண்ட் கலவையுடன் ஜல்லிக் கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரி, உப்பிடமங்களம் பிரிவு அருகே மேம்பாலத்தில் ஏற முயன்ற போது சாலை தடுப்பில் மோதி சாலையின் குறுக்கே நின்றது.

லாரி விபத்தில் சிக்கி நிற்பதற்கான அறிவிப்பு பலகை அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த போதும், அதிகாலை நேரம் என்பதால் இதனை கவனிக்காத மற்றொரு லாரி ஓட்டுநர் வேகமாக வந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதினார். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வெல்டிங் மிஷின்களை பயன்படுத்தி, லாரிக்குள் சிக்கிய ஓட்டுநரை உயிருடன் மீட்டனர்.

இதனால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments