16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் கணவர்... உடந்தையாக இருந்த அக்கா

0 3800

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அக்காவின் கணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்ததாக அக்காவையும் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் சங்கராபுரம் பகுதியில் தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அக்காவிற்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தங்கையை தனது கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க எண்ணிய நிலையில், கணவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்தாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் சாலவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதன்பேரில் போக்சோ சட்டத்தில் அக்காள் கணவனை கைது செய்த போலீசார், அதற்கு உடந்தையாக இருந்ததாக அக்காவையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments