பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து

0 1728

தருமபுரி மாவட்டத்தில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் நேற்று நள்ளிரவில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் புதூர் அருகே சென்ற போது திடீரென பழுதாகி நின்றது. அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து சேலத்திற்கு கற்கள் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கழிவு நீர் லாரி மீது மோதியது.

இதனைக் கவனிக்காமல் குஜராத்திலிருந்து அவிநாசிக்கு உருளைக் கிழக்கு ஏற்றிச் சென்ற லாரி, கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மற்றொரு சரக்கு வாகனமும் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் திருச்சி எடமலைப்பட்டிப் புதூரை சேர்ந்த  ரத்தினவேல், சேலம் மாவட்டம் எட்டிமாங்குறிச்சியை சேர்ந்த சித்தையன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments