ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை... 87 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு

0 1306

ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் கரையை கடந்து, வடக்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 24 மணி நேரத்தில், 19 புள்ளி 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

புரி மாவட்டத்தில், 34 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 87 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான மழை பெய்திருப்பது இதுவே முதல் முறை. தொடர் மழை பெய்து வருவதால், 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments