வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஹேர் ஸ்டைலை பின்பற்றும் இளைஞர்

0 1822

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தலைமுடி ஸ்டைல் போல தனக்கும் வேண்டும் என்று சலூன்கடைக்காரரிடம் இளைஞர் ஒருவர் அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சலூன் கடைக்கு சென்ற அந்த இளைஞர் தனக்கு வடகொரிய அதிபரின் தலைமுடியை போன்று முடியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். முதலில் முடியாது எனக்கூறிய சலூன் கடைக்காரர் பின்னர் மனம்மாறி, வடகொரிய அதிபரின் தலைமுடியை போல, அந்த நபருக்கு சிகை அலங்காரம் செய்திருக்கிறார்.

தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் கண்ட அந்த நபரும், சலூன்கடைக்காரரும் வாய்விட்டு சிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பழையதா அல்லது புதியதா என்பதும், எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments