ஆப்கன் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் ஜெய்சங்கர்

0 1358

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐநா சபையில் பேசிய ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழலை உருவாக்க அனைத்து நாடுகளும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த நாட்டில் வளர்ந்து வரும் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த காலங்களைப் போலவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக இருப்பாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறிய அவர், அந்த நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments