நாட்டில், இதுவரை இல்லாத அளவாக 75 கோடி டோஸ் தடுப்பூசி - இந்தியாவுக்கு W.H.O பாராட்டு.!

0 2250

நாடு முழுவதும் இதுவரை இல்லாத சாதனையாக 75 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி 50 கோடி டோஸ்கள் என்ற நிலையையும், 25ம் தேதி 60 கோடி டோஸ்கள் என்ற உச்சத்தையும் எட்டியது.

இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 75 கோடி என்ற மைல் கல்லை கடந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் வேகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments