காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரட்டை திருமாளிகை சீரமைப்பு பணி முறைகேடு தொடர்பாக விசாரணை

0 1887

இரட்டை திருமாளிகை சீரமைப்பு பணி முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இக்கோவிலின் இரட்டைத் திருமாளிகையில் இருந்த 52 கிலோ வெள்ளியிலான பூஜை பொருட்கள் காணாமல் போனதாகவும்,16 பஞ்சலோக சிலைகள் ஆவணங்கள் இன்றி கிடந்ததாகவும் சீரமைப்புப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன் பேரில் வழக்கை கையிலெடுத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த மாதம் கோவிலுக்கு வந்து விசாரித்துச் சென்றனர். இந்த நிலையில், திங்கட்கிழமை மீண்டும் கோவிலுக்கு வந்த போலீசார், முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததோடு, கோவில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments