திருவெறும்பூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை; 40 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை

0 3434

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடுத்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

காட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்த செல்லையன் மற்றும் வரதாச்சாரி ஆகியோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர்களது வீட்டில் இருந்து 40 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் மற்றொரு வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 5 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments