பணிப்பெண்ணை துகிலுரிந்த துஷ்டர்கள்... பதற வைக்கும் வீடியோ... அலற அலற தாக்கிய கொடுமை.!

0 6367

வீட்டில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பணிப்பெண்ணை  நிர்வாணப்படுத்தி  ஆண்கள் சிலர் கும்பலாக சேர்ந்து குச்சியால் தாக்கிய  வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், யாத்கிரி நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள வீட்டில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அந்தப்பெண் பணிபுரியும் வீட்டில் நகை திருடு போனதாகவும், அதுகுறித்து விசாரிப்பதாக கூறி அந்தப்பெண்ணை தனியாக அழைத்துச்சென்ற 4 இளைஞர்கள், அந்த பெண்ணை துகிலுரிந்து குச்சிகளால் சரமாரியாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலால் வலி தாங்க இயலாமல் துடித்த அந்தப்பெண், தான் திருட வில்லை என்று கூறி மன்றாடியும் அந்த கும்பல் கேட்காமல் அடித்து கொடுமைப்படுத்தியது.

அந்த கும்பலின் மிரட்டலுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப்பெண் யாரிடமும் தெரிவிக்காத நிலையில் அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த போலீசார் இரக்கமின்றி பெண்ணை தாக்கிய கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் ஒன்றரை வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம் என்றும் கூட்டாளிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் வீடியோ தற்போது வெளியானதாகவும் தெரிவித்தனர்.

யாத்கிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேதமூர்த்தி கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காததால் இந்த விவகாரம் வெளியே தெரியவில்லை என்றார்.

தற்பொழுது வீடியோ வெளியாகி உள்ள நிலையில், போலீசார் சுயமாக வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து 4 பேரை கைது செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொடுமையான குற்றங்களை செய்து விட்டு ஊருக்குள் பதுங்கி இருப்போரை காலம் கனகச்சிதமாக சிக்க வைத்து விடும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறி உள்ளது இந்தச்சம்பவம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments