தோசை கருகியதால் கணவன் - மனைவி இடையே தகராறு : மனைவியிடம் சண்டையிட்ட கணவன் தூக்கிட்டு தற்கொலை

0 3397

கோவையில் மனைவி சுட்ட தோசை கருகியதால் ஏற்பட்ட தகராறில், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர் நாராயணசாமி நகரை சேர்ந்த பழனி-மாதவி தம்பதியினர் 2 மகன்களுடன் வசித்து வரும் நிலையில், நேற்றிரவு மாதவி உணவு பரிமாரியபோது தோசை கருகி இருந்ததால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின் பழனி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, குடும்ப தகராறு காரணமாக ஏற்கனவே பழனி 4 முறை தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments