அமைச்சர்களின் வாகனங்களுக்கு சைரன் விளக்கு வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

0 3058

அமைச்சர்களின் வாகனங்களுக்கு சைரன் விளக்கு வேண்டும் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

அப்போது பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சைரன் விளக்குகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்பின் பேசிய அமைச்சர் துரைமுருகன், தலைமைப் பொறியாளர் வாகனங்களுக்கு மட்டும் சைரன் விளக்கு உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளுக்கு வழங்கியிருப்பது போல அமைச்சர்களுக்கும் சைரன் விளக்கு வழங்க வேண்டும், இல்லையெனில் அதிகாரிகளுக்கும் வழங்கக் கூடாது எனக் கூறி அமைச்சர் துரைமுருகன் அவையில் கலகலப்பை ஏற்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments