அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலியே கேப்டன் - பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்

0 3515

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாகப் போலியானத் தகவல்கள் வெளியாகி வருவதாக பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விராட் கோலி தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளதாகவும், அந்தப் பொறுப்பு துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது முற்றிலும் தவறானத் தகவல் எனத் தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளுக்கு விராட் கோலியே தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY