பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

0 4679

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன் ஓட்டிச் சென்ற கார் சேலத்தில் விபத்தில் சிக்கியது.

வானதி சீனிவாசனின் 23 வயதான மகன் ஆதர்ஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மாருதி பலீனோ காரில் கோவையிலிருந்து சேலம் வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

கொண்டலாம்பட்டி பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் வேகமாக வந்த கார், பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,  சேதமடைந்து கிடந்த காரில் இருந்து ஆதர்ஷை மீட்டனர். ஆதர்ஷ் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சிறு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதி வளைவு என்பதால், அதிவேகத்தில் வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments