சென்னை காவல் ஆணையரகத்தைப் பிரித்துப், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் 2 ஆணையரகங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 2142

சென்னை மாநகரக் காவல் ஆணையரகப் பகுதிகளைப் பிரித்து ஆவடியிலும் தாம்பரத்திலும் புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறைக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஆவடி, தாம்பரம் ஆகியவற்றைத் தலைமையிடங்களாகக் கொண்டு தனித்தனிப் புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இப்போது ஆவடி, தாம்பரம் ஆகிய இரண்டு பகுதிகளும் சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆவடி ஏற்கெனவே மாநகராட்சியாக உள்ளது. 5 நகராட்சிகளையும், 5 பேரூராட்சிகளையும் இணைத்துத் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments