மறுமணத்திற்கு வரன் தேடும் பெண்களை குறி வைத்து பண மோசடி; நைஜீரியர்கள் 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு

0 1703

மறுமணத்திற்கு மேட்ரிமோனியில் வரன் தேடும் வசதி படைத்த பெண்களை குறி வைத்து, நடத்தப்பட்ட நூதன மோசடி தொடர்பாக கைதான நைஜீரியர்கள் 2 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில், நைஜீரியர்கள் 2 பேரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதேபாணியில் 15-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்ததையும், வட மாநிலங்களில் வசிக்கும் வசதியில்லாத மக்களை அணுகி சிறிய தொகை கொடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்று அதன் மூலம் பணப் பரிமாற்றம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த மோசடியில் மேலும் சில நைஜீரியர்களும் சம்மந்தப்பட்டுள்ளதையும் கண்டறிந்ததால், காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments