நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் புகார் : பட தயாரிப்பாளர், இயக்குநர் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ்

0 4232

நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரில், பட தயாரிப்பாளர், இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018-ஆம் ஆண்டு அளித்த புகாரில் பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகும்படி படக்குழுவினருக்கு பல முறை நோட்டீசும் அனுப்பியிருந்தனர்.

அவர்கள் ஆஜராகாத நிலையில், மீண்டும் நிபுணன் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோரை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY