மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு... போலீசார் முன்பே இளைஞரை நடுரோட்டில் வைத்து ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கும்பல்

0 3020

ஆந்திராவில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், நடுரோட்டில் வைத்து போலீசார் முன்பே இளைஞரை கும்பல் ஒன்று ரத்தம் சொட்ட சொட்ட தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவன், முங்கமுரு பகுதியிலுள்ள மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தான். அப்போது, அங்கிருந்த விஜயவர்தனுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்படவே, ராமகிருஷ்ணன், விஜயவர்தனின் கார் கண்ணாடியை உடைத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த விஜயவர்தன் நண்பர்களை வரவழைத்து, ராமகிருஷ்ணனை நடுரோட்டில் வைத்து போலீசார் முன்பே கொடூரமாக தாக்கினான். மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments