மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்... அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர்

0 2235

நெல்லை அருகே மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை அடுத்த சவுந்திரபாண்டிய புரத்தை சேர்ந்த நாராயண பெருமாள் என்பவர், காவல்கிணறு மேம்பாலத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது என்ஜினில் இருந்து புகை வருவதை கண்டு வேகமாக, கீழே இறங்கி காரை விட்டு விலகிச் சென்றுள்ளார். பிறகு தீ மளமளவென கார் முழுவதும் பரவி எரிய தொடங்கியது.

தகவலறிந்து வந்த வள்ளியூர் தீயணைப்பு காவலர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments