திமுகவின் முதல் மாநிலங்களவை எம்.பி., சோமசுந்தரத்தின் பேரன் வெட்டிப்படுகொலை

0 2594

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுகவின் முதல் மாநிலங்களவை எம்பி, சோமசுந்தரத்தின் பேரன் ராஜேந்திரன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

பேளுக்குறிச்சியில், ராஜேந்திரன் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments