பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவி : கடைசி நிமிடத்தில் 5 கி.மீ. பயணித்து மாணவிக்கு உதவிய போலீசார்

0 2222

சென்னையில், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு, கடைசி நேரத்தில் 5 கி.மீ. தூரம் வரை சென்று புகைப்படம் வாங்கி கொடுத்து உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கீழ்பாக்கம் தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர்,  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்து வர மறந்து விட்டதால் பதற்றத்துடன் இருந்துள்ளார்.

இதனை பார்த்த உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, தனது பைக்கில் மாணவியை அழைத்து சென்று புகைப்படத்தை வாங்கி கொடுத்துவிட்டு, சரியான நேரத்தில் தேர்வு மையத்தில் மாணவியை இறக்கி விட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments