ஸ்ரீநகரில் பணியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ.யின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

0 3036

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட காவல் துணை ஆய்வாளர் அர்ஷாத் அகமது மிர்-ன் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கைதி ஒருவரை கான்யார் என்ற இடத்திற்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று விட்டு வெளியே வரும் போது ஒளிந்திருத்த தீவிரவாதி அவரை நோக்கி தலையில் 3 முறை சுட்டதும் துணை ஆய்வாளர் தரையில் விழும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள கல்முனா என்ற அவரது கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட உடல் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. 25 வயதே ஆன காவல் துணை ஆய்வாளரை சுட்டுக் கொன்ற குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளதாகவும், விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments