பைக் ரேசில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு... இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

0 1628

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பைக் ரேசில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 9 பேரின்  பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

 நேற்று மாலை  மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், சென்னையை சேர்ந்த  9 இளைஞர்களின்  இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் இதுபோன்று பைக் ரேஸில்  ஈடுபடுவது வழக்கமாகி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments