மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகர் வசீம் அக்ரம் கொல்லப்பட்ட சம்பவம்... திருப்பத்தூர் எஸ்.பி. பணியிடமாற்றம், வாணியம்பாடி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்

0 15050

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுத்ததாக மனித நேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்து வந்த மஜக பிரமுகர் வசீம் அக்ரமுக்கு, கஞ்சா கும்பலின் தலைவனான டீல் இம்தியாஸ் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்துள்ளான். இது குறித்து ஜூன் மாதமே வசீம் அக்ரம் தகவல் அளித்தும், டீல் இம்தியாஸை கைது செய்யாமல் போலீசார் மெத்தனம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வசீம் அக்ரம் கொல்லப்பட்டதை அடுத்து, எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி, சென்னை சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளார். வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments