உ.பி. தேர்தலில் பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டி?

0 2579

த்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, அதன் பொதுச்செயலாளரான  பிரியங்கா காந்தியின் தலைமையில் தனித்து போட்டியிடும் என  காங்கிரஸ்  மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், 403 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனியாக போட்டியிடும் எனவும் ஆக்ராவில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

2017 ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  கூட்டணி அமைத்து போட்டி யிட்ட  காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வென்று மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments