கர்நாடகாவில் லாரியும், ஜீப்பும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலி

0 2222

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் மதநாயக்கனஹள்ளியில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலியாகினர்.

சிந்தாமணி ஒருவழிச் சாலையில் சென்ற கொண்டு இருந்த ஜீப்பும், சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரியும் நேருக்கு மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் ஜீப்பில் பயணித்த 14 பேர் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments