தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர்

0 1708

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் இந்த மசோதாவை அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நீட் பிரச்சினை தொடர்பாக, பேரவையில் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

தற்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் என முதலமைச்சர் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க, அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர் மசோதாவை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிர்கொல்லியான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இந்த மசோதாவை அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments