மைதானத்தின் மேல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பூனை.. தேசியக் கொடியை விரித்துப் பிடித்து பூனையைக் காப்பாற்றிய இளைஞர்கள்

0 1410

அமெரிக்காவில் விளையாட்டு மைதானத்தின் உச்சியிலிருந்து விழுந்த பூனையை அந்நாட்டு தேசியக் கொடியை வைத்து சில இளைஞர்கள் காப்பாற்றினர்.

மியாமி நகரில் உள்ளூர் கால்பந்துப் போட்டியின்போது, அரங்கில் மேல்தளத்தில் நுழைந்த பூனை ஒன்று அங்கிருந்து இறங்கத் தெரியாமல் தொங்கியது. இதனைப் பார்த்த கீழ்தளத்தில் இருந்த ரசிகர்கள் தாங்கள் வைத்திருந்த அமெரிக்க தேசியக் கொடியை விரித்துப் பிடித்தனர்.

அடுத்த சில நொடிகளில் மேலிருந்து கீழாக விழுந்த பூனை, சரியாக தேசியக் கொடியில் விழ, பத்திரமாக மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments