ஸ்பெயினில் பரவும் காட்டுத் தீ... வாழிடங்களை விட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

0 1183

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

சியாரா பெர்மேஜியா மலைப்பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இங்கு திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. சுமார் 6 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் சியாரா மலையை ஒட்டியுள்ள நகரங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments