கனமழையால் ஸ்தம்பித்தது மும்பை நகரம்... கடும் போக்குவரத்து நெரிசல்

0 1368

மும்பையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

நேற்று பகல் நேரம் பல மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் இதனால் போக்குவரத்து மெல்ல ஊர்ந்து சென்றது. கோரேகான் பகுதியில் உள்ள வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சாலைகளில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. மும்பையில் இன்றும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments