தமிழகத்தில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2346
தமிழகத்தில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 212 பேரும், சென்னையில் 197 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 160 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 115 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,512 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 22 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 16,473 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments