விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகும் 4 பேர் கொண்ட பொதுமக்கள் குழு..! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் விண்கலம் மூலம் செல்ல திட்டம்..!

0 1636
விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகும் 4 பேர் கொண்ட பொதுமக்கள் குழு..! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் விண்கலம் மூலம் செல்ல திட்டம்..!

அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர் இந்த வாரம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

திட்டமிட்டப்படி பயணம் நடந்தால் விண்வெளி பயணம் செல்லும் உலகின் முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இவர்கள் பெறுவார்கள். ஷிஃப்ட் ஃபோர் பேமெண்ட்ஸ் ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான 38 வயது ஜேரெட் ஐசாக்மேன் என்ற கோடீஸ்வரரின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.

வரும் புதன்கிழமை பயணத்திற்கான கவுண்டவுன் தொடங்கவுள்ள நிலையில், இன்ஸ்பிரேஷன் ஃபோர் என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து Space X-ன் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய இருக்கிறது.

பூமியில் இருந்து சுமார் 575 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த விண்கலம், மணிக்கு சுமார் 27 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை முழுவதுமாக சுற்றி வரும். 3 நாட்கள் வரை நீடிக்கும் இந்த விண்வெளி பயணம் இறுதியில் அட்லாண்டிக் கடலில் வந்து முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments