கொரோனா தடுப்பூசி போடுங்கள்..! சிறப்பு பரிசுகளை அள்ளுங்கள்..!

0 2210
கொரோனா தடுப்பூசி போடுங்கள்..! சிறப்பு பரிசுகளை அள்ளுங்கள்..!

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் 620 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 80 நடமாடும் மையங்கள் வாயிலாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேந்தமங்கலம் பேரூராட்சியில் 7 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு திமுக சார்பில் தலா 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண்களுக்கு தொண்டு நிறுவனம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் 1 லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கனும், பெண்களுக்கு இலவச எவர்சில்வர் தட்டும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 100 ரூபாய்க்கான செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வழங்கப்பட்டது.
மேலும் குலுக்கல் முறையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 3 பேருக்கு தங்க நாணயம், செல்போன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments