நீட் தேர்வு அச்சத்தால் மாணவன் தற்கொலை ; உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

0 2680
நீட் தேர்வு அச்சத்தால் மாணவன் தற்கொலை ; உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதி, பத்து லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

நீட் தேர்வால் அனைத்து மாணவர்களுமே பாதிக்கப்படுவதாகவும், மாணவர்கள் யாரும் விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும், மாணவர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதயநிதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments