மங்களூர் விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து அதானியின் பெயர் நீக்கம்

0 5463
மங்களூர் விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து அதானியின் பெயர் நீக்கம்

மங்களூர் விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து அதானியின் பெயர் நீக்கப்பட்டது. மங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உரிமையை அதானி நிறுவனம் பெற்றதும் அதானி ஏர்போர்ட்ஸ் என்கிற பெயர்ப்பலகையை வைத்தது.

இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சமூக ஆர்வலர் தில்ராஜ் ஆல்வா, விமான நிலையங்கள் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமையின்படி விளக்கம் கேட்டதற்கு, பெயரை மாற்றக் கூடாது என உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதானி ஏர்போர்ட்ஸ் என்கிற பெயர் நீக்கப்பட்டு மங்களூர் விமான நிலையம் என்கிற பெயருடன் புதிய பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளிலும் இந்தப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments