கிரீஸ் அரசின் கட்டாய கொரொனா தடுப்பூசி உத்தரவுக்கு எதிர்ப்பு - போராட்டம்

0 1577

கிரீஸ் அரசின் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.

கிரீஸ் அரசின் கட்டாய தடுப்பூசி உத்தரவை கடைப்பிடிக்காத சுமார் 6 ஆயிரம் சுகாதார முன்களப்பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Thessaloniki நகரத்தில், கிரீஸ் பிரதமர் Kyriakos Mitsotakis கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த வளாகத்தை நோக்கி சென்ற சுமார் 2 ஆயிரத்து 500 போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments