நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் 20 ஆண்டுகள் நிறைவு ; வீரர்கள் அஞ்சலி

0 2120

அமெரிக்காவில், இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிர்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு புளோரிடா மாகணத் தீயணைப்பு துறையினர் 110 படிகட்டுகள் ஏறிச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

2001ஆம் செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகள் விமானங்களால் மோதினர். அப்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 340 தீயணைப்பு வீரர்களும், 60 போலீசாரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீயணைப்பு வீரர்கள் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் ஏந்தியபடி 110 படிகட்டுகள் ஏறிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments