குடிபோதையில் பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

0 3655
குடிபோதையில் பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

சென்னையில் குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். எம்ஜிஆர் நகர், சூளை பள்ளம் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த செல்வம் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

10ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஊரைச் சுற்றி வந்த இவருடைய மகன் பிரகாஷ் மதுவுக்கு அடிமையாகியுள்ளான். அவ்வப்போது பெயிண்ட்டர் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருவாயில் மது வாங்கிக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபடுவது பிரகாஷின் வழக்கம் என்று கூறப்படுகிறது.

நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த மகனை செல்வம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், வீட்டிலிருந்த கத்தி ஒன்றை எடுத்து தந்தையின் கழுத்து, கை உட்பட பல இடங்களிலும் சரமாரியாகக் குத்தியுள்ளான். அவனை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து, அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments