விதியை மீறி மதுக்கடைகள் செயல்பட்டால் நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 2153

விதியை மீறி, கோயில்கள், பள்ளிகளுக்கு அருகே மதுக்கடைகள் செயல்படுவது கவனத்திற்கு வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீதும், குறிப்பிட்ட கடையின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பது கொள்கை ரீதியான முடிவு எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments