தேசிய அளவிலான கோகோ வீராங்கனை கொடூரமாக கொலை

0 3007

உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோரில் தேசிய அளவிலான கோகோ வீராங்கனை கொடூரமாக கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிகமாக அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து வந்த அந்தப் பெண், ஊரடங்கால் வேலையிழந்தார்.

வெள்ளியன்று ஒரு தனியார் பள்ளிக்கு வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற அவர் நெடுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் தேடிப் பார்த்தபோது, ரயில்வே சிமென்ட் ஸ்லீப்பர்கள் அடுக்கி வைத்துள்ள இடத்தில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆடைகள் கிழிந்தும் முகம் சிதைந்தும், ஒரு பல் உடைந்தும் இருந்த நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments