பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

0 1919

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் சாதனைகளால் இந்தியாவின் நற்பெயர் மேலும் உயர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 5 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது.

இந்த நிலையில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு தனது இல்லத்தில் விருந்து அளித்த  பிரதமர் மோடி, அவர்களின் போராட்டங்கள், வாழ்க்கை பயணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பல்வேறு வீரர்கள் தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் தங்களது கையொப்பமிட்டு அதனை பரிசாக பிரதமருக்கு அளித்தனர்.

அனைத்து வீரர்களும் கையொப்பமிட்ட அங்கியும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. 

இந்த பாராட்டு விழாவில், தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவும் பங்கேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments