நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

0 3218

நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் தனுஷ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஏற்கனவே இரண்டு முறை தோல்வியடைந்து 3ஆவது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்த அந்த மாணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,மாணவரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவரின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments