சோழிங்கநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் மணி பர்சை பறித்து சென்ற 2 இளைஞர்கள் கைது

0 3062

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் பெண்ணிடம் மணி பர்சை பறித்து சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாக்கத்தை சேர்ந்த நவீனா என்ற பெண் சோழிங்கநல்லூர் தபால் நிலையம் அருகே ஓஎம்ஆர் சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நவீனா கையில் வைத்திருந்த மணி பர்சை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து நவீனா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான  இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய், அஜித்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments