இந்தியாவில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு.. கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா

0 2741

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை 33,376 ஆக பதிவாகி இருந்த தொற்று எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையான இன்று 28,591ஆக குறைந்துள்ளது.

இதுவரையிலான மொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சமாக உள்ள நிலையில், இதில் 1.18சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதமும் 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 5 கோடியே 75லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments