பரோட்டா சாப்பிட்டவருக்கு திடீர் மாரடைப்பு? வாயில் வைத்த பரோட்டாவோடு உயிரிழப்பு

0 5490

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், வேலை நிமித்தமாக திருக்கோவிலூர் சென்றுள்ளார்.

மாலை பேருந்து நிலைய வளாகத்தில் அமர்ந்து பார்சல் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாயில் வைத்த பரோட்டாவோடு அவரது உயிர் பிரிந்த நிலையில், உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments