அமெரிக்காவில் காரில் சோதனையிட்ட போலீசார் மீது துப்பாக்கிச் சூடு; போலீசார் திருப்பிச் சுட்டதில் குற்றவாளி நிகழ்விடத்திலேயே பலி

0 1786

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

புளோரிடாவில் உள்ள ப்ரேவர்டு கவுன்டியில் கார் ஒன்றினை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் தேடப்படும் குற்றவாளிகள் இருந்தை அவர்கள் கண்டுபிடித்தனர். அப்போது காரில் இருந்த பாரிஸ் வைல்டர் என்ற நபர் தான் வைத்திருந்த ஏஆர் 15 துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாகச் சுட்டார்.

இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து தோமர் என்ற மற்றொரு காவலர் சுட்டதில் பாரிஸ் வைல்டர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார். தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments